கடந்த வாரம் சனிக்கிழமையன்று, புனேவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று ரோடில் தானாக தீப்பிடித்து எரிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, வாகனத்தின் பாதுகாப்புத் தரங்கள் குறித்து பயனர்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டது.


இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்


மேலும் இது குறித்து பதிலளித்த ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் பேசும்போது, "நாங்கள் எப்போதுமே பாதுகாப்புக்குதான் முன்னுரிமை அளிக்கின்றோம். தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரச்னைகள் கண்டுப்பிடிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


இதற்கிடையில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பின் (DRDO) ஆய்வகங்களின் கீழ் இயங்கும் CFEESஸுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படுமா?


இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆய்வு செய்யுமாறு தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திடம் (CFEES) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 



மேலும், CFEESஸுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவில், கண்டுபிடிப்புகளையும், பிரச்னைக்கான தீர்வுகளையும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உதவ வேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டில் பெரிய மாற்றம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR