பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்திகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் அளிப்பது குறித்து நிதி அமைச்சகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் கூடுதல் வருவாயைப் பெறவும் உதவும் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தைத் தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பங்களிப்பை 14 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க ஓய்வூதியதாரருக்கு சில சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருவூலத்திற்குச் சுமை ஏற்படாமல் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும், ஓய்வூதியத்தை அதிகரிக்க வருடாந்திர முதலீட்டின் பெரும்பகுதி சாத்தியமாகும் என்றும் அமைச்சகத்தின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது மொத்த கார்பஸில் 40 சதவீதம் வருடாந்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் பெற்ற கடைசி சம்பளத்தில் 35 சதவீதத்தைப் பெறலாம். எனினும், சந்தையுடன் இணைக்கப்படுவதால் அதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.


சமீபகாலமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஓய்வூதியதாரர்களும் இன்னும் பல தரப்பினரும் பல வித போராட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன? 


திங்கள்கிழமை அனைத்து அமைச்சகங்களுக்கும் தகவல் அனுப்பிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு மன்றம்' என்ற பதாகையின் கீழ் தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் தெரிவிக்க வேண்டும் என்று கீழே கையொப்பமிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக, நாடு முழுவதும் மாவட்ட அளவிலான பேரணிகளை ஓபிஎஸ் தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிசான்ராவ் காரத் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது, தேசிய ஓய்வூதிய முறையின் (என்பிஎஸ்) கீழ் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட 567,116 பயனாளிகள் உள்ளதாக கூறினார்.  


"60 வயதிற்குப் பிறகு என்பிஎஸ் -இன் கீழ் பங்களிக்கும் பயனாளிகள் மற்றும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு என்பிஎஸ் -இல் இருந்து வெளியேறி ஆண்டுத்தொகை பெறுபவர்களும் இந்த 567,116 பேரில் அடங்குவர்" என்று அமைச்சர் நாடாளுமன்ற அமர்வின் போது கூறினார்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, ​​டிஏ-வும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஓய்வூதிய கோரிக்கைப் போராட்டத்தால் ஸ்தம்பித்த அரசு சேவைகள்! 3 நாளாக வேலைநிறுத்தம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ