உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் யோகி ஆதித்யாத் தலைமையில் முற்பகல் 11 மணியளவில் இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடங்குகிறது. 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, தலைநகர் லக்னோவிற்கு வெளியே, உத்தரப்பிரதேச அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.


இதற்காக பிரயாக்ராஜில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளாவிற்கு பாஜக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் பிரயாக்ராஜில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது.


இதில், வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.