ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் உமர் அப்துல்லா!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மரணத்திற்கு பிறகு மாநிலத்தில் பி.டி.பி. மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 


இதையடுத்து, பா.ஜ.க-வுடனான கூட்டணி எனது தந்தை முப்தி முகமது சயீதின் விருப்பத்தில் அமைந்தது என அவரது மகள் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பி.டி.பி. - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து வந்தது. இந்நிலையில், தற்போது கார்ஷ்மீரில் மேஹபூபா முப்தி அரசுடனான கூட்டணியை முறிவு தொடர்பான அறிவிப்பை பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் வெளியிட்டார். 


இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவி விலகல் கடிதத்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு மெகபூபா முப்தி அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை மெகபூபா முப்தி சந்தித்து விளக்கம் தருவதாக தெரிவித்திருந்தனர். 


இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் எதிர்க்கட்சி தலைவரான உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறியதாவது...! 


நான் ஆளுநரை சந்தித்தேன். அப்போது அவரிடம் பேசியது, 2014 ஆம் ஆண்டில் அரசமைப்பை உருவாக்க தேசிய மாநாடு கட்டாயமில்லை எனவும், 2018 ஆம் ஆண்டிற்கும் நாங்கள் கட்டளையிடப்படவில்லை என்றும் கூறினேன். ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் உமர் அப்துல்லா தெரிவித்தார். 


அதுமட்டும் இன்றி ஆளுநரின் ஆட்சி நீண்ட காலத்திற்கு விதிக்கப்படக் கூடாது என்றும் நாங்கள் ஆளுநரை கேட்டுகொண்டோம். தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கும் உண்டு. மீண்டும் புதிய தேர்தலை நடத்தி மக்களுக்கான கட்டளையை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்!