ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?
இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றின் மாறுபாடான ஒமிக்ரான் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் இந்தியாவில் இதுவரை சுமார் 213க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை டெல்டா வைரஸை விட மூன்று மடங்கு அதிவேகமாக பரவக்கூடியதாக உள்ளது. கோவிட்-19 தொற்றை விட ஒமிக்ரான் வைரஸ் அதிகளவில் மற்ற நாடுகளில் அதிவேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ | துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் அதிகமாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகையில், டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளது. விடுமுறை காலங்களில் மக்கள் அதிகம் கலந்து விடுவதால் இந்த நோய் பரவல் அதிகளவில் பரவும் ஆபத்துள்ளது. அது மட்டுமல்லாது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், கொரோனவிலிருந்து மீண்டவர்கள் என அனைவருக்கும் இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகலாம். இருப்பினும் இன்னும் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர், இதுவும் இந்த நோய் பரவலுக்கு காரணமாக இருக்கலாம்.
மூன்றாவது அலையை தடுக்க அரசு தயாராகி வருகிறது. கோவிட்-19 நோயாளிகளுக்கு தேவைப்படும் தனிமைப்படுத்துதல் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் லாக்டவுனுக்கு முன் 10,180 ஆக இருந்த படுக்கைகளின் எண்ணிக்கை 3 ஆகஸ்ட் 2021 நிலவரப்படி 18,03,266 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ICU-வில் படுக்கைகளின் எண்ணிக்கை 2,168 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 3,783 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திறன் கொண்ட 3,236 பிரஷர் ஸ்விங் உறிஞ்சும் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அறிக்கைப்படி இந்தியாவில் 1,000 பேருக்கு 1.4 படுக்கைகள், 1,445 பேருக்கு 1 மருத்துவர் மற்றும் 1,000 பேருக்கு 1.7 செவிலியர்கள் உள்ளனர். மார்ச் 2020 நிலவரப்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலோபதி மருத்துவர்களில் 6.8% பற்றாக்குறை உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைப்படி , ஆபத்தில் உள்ளதாக சொல்லப்படும் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் கட்டாயமாக RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த செவ்வாய் கிழமையன்று, மத்திய சுகாதார அமைச்சகம், இரவு நேர ஊரடங்கு உத்தரவையும், பெரிய கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் மாநிலங்கள் விதிக்குமாறு கூறியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு அதிகளவில் கூடும் கூட்டங்களால் எளிதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் திருமணங்கள், இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ | கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR