சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி அகமதாபாத்தில் உள்ள 597 அடி உயர சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் 'அயர்ன் மேன்' சர்தார் வல்லபாய் படேலின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வியாழக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளது.


சர்தார் வல்லபாய் பட்டேலின் 145வது பிறந்தநாளான இன்று, நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள அவரது பிரம்மாண்டமான திருவுருவச் சிலைக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கேவடியா பகுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் மோடி இன்று பங்கேற்கிறார். பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



பட்டேல் சிலை நிறுவப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி அனைத்து மாநில காவல்துறையின் ஒற்றுமையை விளக்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் துணை ராணுவப் படையினரும் இந்த அணிவகுப்பில் கலந்துக் கொள்கின்றன. இதனிடையே, அகமதாபாத்திற்கு நேற்றிரவு வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் தமது தாயாரை சந்தித்துப் பேசினார்.