ஸ்ரீநகர்: ஜம்மு போலீஸ் படையிடமிருந்து பறித்த துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் 4 நிமிட வீடியோவை ஹிஸ்புல் முஜாகிதீன் வாட்ஸ் அப்பில் பயங்கரவாதிகள் வெளியிட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி, கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். போலீசிடம் இருந்து ஆயுதங்களை பறித்த பயங்கரவாதிகள் விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேலும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர், கண்காணிப்பை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. 


கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 67 ஆயுதங்களை பயங்கரவாதிகள் பறித்துள்ளார். பாதுகாப்பு படையினரிடம் இருந்து பறித்த துப்பாக்கிகள் ஏ.கே. 47, ஐஎன்எஸ்ஏஎஸ், கார்பின், எஸ்எல்ஆர், 303 ரைபிள் ரக துப்பாக்கிகள் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


இந்நிலையில் காஷ்மீரில் போலீசிடம் இருந்து பறித்த துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். இதுதொடர்பான 4 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் வெளியிட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளிவந்துள்ளது. வீடியோவில் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் இணைய செய்யும் முயற்சியையும் மேற்கொண்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 


புதிய வீடியோ சிரிக்க, கட்டிப்பிடித்து பார்த்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பணியாளர்களையும்; ஸ்ரீநகர் சம்பிரதியாகிய போராளிகளுடன் இணைப்புகள் மீது விசாரணை