கோழிக்கறியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தெலுங்கானா மந்திரிகள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத்தில் மேடையில் ஒரு நீண்ட வரிசையில் அமைச்சர்கள் சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதைக் காணலாம். அமைச்சர்கள், அனைவரும் வெள்ளை சட்டைகளில், ஒரு கையில் சிக்கனையும், மறுபுறம் காகித தட்டுகளையும் வைத்திருப்பதைக் காணலாம்.


சிக்கன் மற்றும் முட்டையை சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற அச்சத்தை அகற்ற இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


மேடையில், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் சிக்கனை கடித்துக்கொண்டிருப்பதைக் காணலாம். அவருடன் எடிலா ராஜேந்தர், தலசானி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பங்கேற்றனர். 


கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறிகள் மூலமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ஏராளமான மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். இதனால், இந்தியாவில் கோழிக்கறி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. 


இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையிலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தெலுங்கானா மாநிலத்தில் மந்திரிகள் பொது மேடையில் கோழிக்கறியை சாப்பிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.