புதுடெல்லி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்தியா உலகில் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூன் 5, 2021) கூறினார், மேலும் நாட்டின், புதுப்பிக்கவல்ல எரிசக்தி திறன் கடந்த 6-7 ஆண்டுகளில் 250 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக சுற்று சூழல் தினமான இன்று, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன்,  சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து நடத்திய ஒரு மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விஷயத்தில், இந்தியா உலகத்தின் முன் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, வளர்ச்சி பணிகளைத் நிறுத்த வேண்டும் என்ற அவசியமில்லை” எனக் கூறினார்.


மேலும், “பொருளாதாரம் மற்றும் சூழலியல் இரண்டும் ஒன்றாகச் இணைந்து செல்லலாம், அவ்வாறு செல்லும் போது சுற்றூ சூழலை பாதிக்காத முன்னேற்றம் சாத்தியம், இதுதான் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை. 21 ஆம் நூற்றாண்டில், இந்தியா நவீன சிந்தனை மற்றும் நவீன கொள்கைகளிலிருந்து மட்டுமே ஆற்றலைப் பெறும். இந்த சிந்தனையுடன், ஒவ்வொரு துறையிலும்  அரசு தொடர்ந்து கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது ” என்றார் பிரதமர் (PM Modi).


ALSO READ | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை;  அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன


 


"இந்தியா, உலகளாவிய சிந்தனையுடன் முன்னேறி வருகிறது, அது சர்வதேச அளிவிலான  சூரிய எரிசக்தி கூட்டணியாக இருந்தாலும்,  அல்லது வேறு திட்டங்கள் ஆனாலும் சரி.  ஒரே சூரியன், ஒரே உலகம் என்ற பாதையில், பேரழிவுகளை எதிர்த்து நிற்கும் உள்கட்டமைப்பு முன்முயற்சிக்கான கூட்டணியில் இந்தியா செல்கிறது. எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தியா அறிந்திருக்கிறது காலநிலை மாற்றம் காரணமாக மேலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.


"இந்தியாவில் 2020-2025 எத்தனால் கலந்து பயன்படுத்தும் எரிபொருளுக்கான செயல் திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையையும்" பிரதமர் வெளியிட்டார். நாடு முழுவதும் எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக புனேவில் E-100 எனப்படும் முன்னோடி திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.


எத்தனால் என்பது சுற்றுசூழலை மாசுபடுத்தாத ஒரு எரிபொருள் ஆகும். வாகனங்களில் பெட்ரோலுடன் கலந்து, இதனை எரிபொருளாக பயன்படுத்தலாம். 1 டன்(1000கிலோ) கரும்பிலிருந்து, சுமார் 70 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யலாம் என கூறப்படுகிறது. 


"இன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்தியா மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. எத்தனால் துறையின் வளர்ச்சிக்கான விரிவான செயல் திட்டம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான ஒரு லட்சிய E-100 பைலட் திட்டம் நாடு புனேவிலும் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக எத்தனால் மாறிவிட்டது ”என்று பிரதமர் கூறினார்.


நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதன் மூலம், வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய 11 துறைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது என்று பிரதமர் அறிவித்தார். 


ALSO READ | மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!!
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR