ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பயணம்: ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம்
ஹைதராபாத்தில் அறிமுகமாகியுள்ள மெட்ரோ இரயிலில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை கோடி அசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து, மியாப்பூரில் இருந்து நாகோல் வரையிலான மெட்ரோ சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
நேற்று மட்டுமே ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் இயக்குனர் என்.வி.எஸ். ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், பிற்பகல் வரை சுமார் 45 ஆயிரம் டோக்கன்கள் மற்றும் 10 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த மெட்ரோ சேவையில் ரூ.10 முதல் ரூ.60 மதிப்பிலான கட்டண சேவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.