முத்தலாக்கிற்கு எதிராக 10 லட்சம் முஸ்லிம் கையெழுத்து
முத்தலாக் மூலம் விவகாரத்து செய்வதற்கு எதிரான மனுவில், இந்தியா முழுவதும் 10 லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
புதுடெல்லி: முத்தலாக் மூலம் விவகாரத்து செய்வதற்கு எதிரான மனுவில், இந்தியா முழுவதும் 10 லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த முத்தலாகுக்கு எதிராக பெரும்பாலனவர்கள் பெண்கள் என தெரியவந்துள்ளது. முத்தலாக் முறையை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முத்தலாக் முறை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அரசியல் சாசனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்ட சமநிலைக்கு எதிரானது எனக்கூறியிருந்தது.
இந்நிலையில், முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பு முத்தலாக் முறைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதில் இந்தியா முழுவதுமுள்ள 10 லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.