ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.


காஷ்மீரின்  பாராமுல்லா மாவட்டம் ஹரிடார் டார்சூ பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 


இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதலின் போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு தீவிரவாதி பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினர் அவனை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 


பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.