மேற்கு வங்கம், ஹைதராபாத்தில் வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துக்கொண்டே வருகிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் வெங்காயம் வரத்து குறைந்து இருக்கிறது.


வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழக பகுதிகளுக்கு வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.


இந்நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டது. மேற்கு வங்கத்தில் பர்த்வான், முர்ஷிதாபாத் மற்றும் ஜார்கிராமில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ .150 க்கு விற்பனை செய்கின்றனர்.