பணவீக்கத்தால் நாட்டில் தற்போது நிலைமை சரியில்லை இருக்கிறது. அனைத்து உணவு மற்றும் பானங்களின் விலை தொடந்து வின்னைதாண்டி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் பச்சைக் காய்கறிகள் மற்றும் தக்காளிகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்கப்படுவது தான் பொதுமக்களை அதிகளவில் அலற வைக்கிறது. முன்னதாக கிலோ ரூ.30 முதல் 40 கிடைத்த தக்காளி, சில்லரை மார்க்கெட்டில் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக தக்காளி கிலோ ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தவிர குடமிளகாய், பாகற்காய், உள்ளிட்ட மற்ற பச்சைக் காய்கறிகளின் விலையும் தொடந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இதற்கிடையில், அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் முதல் வெங்காயத்தின் விலையும் உயரும் என்று கடந்த வாரம் செய்தி ஒன்று வெளியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, அடுத்த மாதம் முதல் தக்காளியைப் போல வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கப்போவதாக கிரிசில் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. அதுவும் தக்காளியை விட வெங்காயத்தின் விலை இருமடங்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொது மக்கள் மீதான பணவீக்கச் சுமை மேலும் அதிகரிக்கும். இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தின் வரத்து பாதிக்கப்பட்டது தான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வெங்காயம் கிலோ ரூ.60 முதல் 70 வரை விற்பனையாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Gold Prices: தொடர்ந்து சரிவில் தங்கம் விலை! ஒரு காரட் தங்கம் இவ்வளவு தானா?


இந்த இடங்களில் 50 ரூபாய் கிலோ வெங்காயம்
இதற்கிடையே செப்டம்பர் மாதம் தொடங்குவதற்கு முன்னரே சில இடங்களில் வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. பல நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 30 ரூபாயை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தளத்தின்படி, செவ்வாயன்று அதாவது ஆகஸ்ட் 8 அன்று, ஹிமாச்சலப் பிரதேசத்தின் லோஹா ஸ்பிதியில் வெங்காயத்தின் விலையில் பம்பர் உயர்வு பதிவு செய்யப்பட்டது. இங்கு ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இது தவிர, கோஹிமா மற்றும் காங்டாக்கில் வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. அதேசமயம், ஹிமாச்சல் மாநிலம் சம்பாவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.40கக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் நிலை என்ன?
தமிழகத்தை பொறுத்த வரை, கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் என விற்பனையானது. இந்த நிலையில் இன்று தக்காளி விலையில் ஏற்ற இறக்கமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை குறையவில்லை என்றும் நேற்றைய விலையில் தான் விற்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.


இதனிடையே வெங்காயம் கிலோ ரூ.22, சின்ன வெங்காயம் ரூ.80, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பச்சை மிளகாய் கிலோ ரூ.55, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.210, பூண்டு ரூ.200, பச்சை குடைமிளகாய் ரூ.100, வண்ண குடை மிளகாய் ரூ.160, தேங்காய் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மலிவு விலையில் ரயில் டிக்கெட்.. இதை மட்டும் செய்தால் போதும்! உடனே படியுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ