Tomato Price Hike: இந்தியா முழுவதும் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்க பட்ஜெட்டையே பதம்பார்த்தது மட்டுமல்லாமல், கடந்த ஒரு மாதமாக தினம் தினம் மனம் வெதும்ப வைக்கிறது. சந்தைகளில் வரத்து இல்லாததால் சில பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.300 வரை உயர்ந்துள்ளது.
எவ்வாறாயினும், விண்ணைத் தொடும் விலை, இந்தியாவில் தக்காளி விவசாயிகளுக்கு பெரும் வரமாக மாறியுள்ளது எனலாம். பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது போல, மண்டிகளில் தக்காளியை அதிக விலைக்கு விற்று பல விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கர்நாடகாவில் ராஜேஷ் என்ற விவசாயி தனது தக்காளியை விற்று ரூ.40 லட்சம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
தக்காளி விலை உயரும் முன், 12 ஏக்கர் நிலத்தில் தக்காளியை அவர் பயிரிட்டார். உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசிய அவர், இந்த சீசனில் தக்காளியை விற்று சம்பாதித்த பணத்தில் ஒரு எஸ்யூவி வாங்கியதாக கூறினார். அவர் மேலும் கூறியதில்,"எனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டேன். கிட்டத்தட்ட 800 தக்காளி மூட்டைகளை விற்று ரூ. 40 லட்சம் சம்பாதித்தேன். சில மாதங்களுக்கு தக்காளியின் விலை இதே நிலையில் இருந்தால், எனக்கு ரூ. 1 கோடி லாபம் கூட கிடைக்கும். நான் என் நிலத்தை நம்பினேன், அது ஏமாற்றவில்லை. தக்காளி விற்ற பிறகு ஒரு எஸ்யூவி வாங்க இது எனக்கு உதவியது," என்றார்.
மேலும் படிக்க | தக்காளியை அடுத்து விலை ஏறப்போகும் வெங்காயம் - அதுவும் இவ்வளவா... அதிர்ச்சி தகவல்!
இப்போது நல்ல வாழ்க்கைக்கு போதுமான பணம் இருப்பதால் விவசாயி தனக்கு ஒரு துணையும் தேடுகிறார். "அனைவரும் அரசு மற்றும் கார்ப்பரேட் வேலைகளுடன் கூடிய மாப்பிள்ளைகளை விரும்புவதால், நான் முன்பு பலராலும் நிராகரிக்கப்பட்டேன்," என்று ராஜேஷ் கூறினார். மேலும், "சரியான நேரம் வந்தால் ஒரு ஊழியரை விட விவசாயிகளால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று நான் கூற விரும்புகிறேன். எனது புதிய எஸ்யூவியில் சென்று இப்போது மணமகளைத் தேட விரும்புகிறேன்" என்றார்.
முன்னதாக, கர்நாடக விவசாயி ஒருவர் ஜூலை 5ஆம் தேதி இரவு 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி பயிர்கள் திருடப்பட்டதாக புகார் அளித்தார். இரவில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.
திடீர் விலை உயர்வுக்கு காரணம்?
கடுமையான வெப்பம், போதிய உற்பத்தியின்மை, பருவமழை தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், பூச்சித் தாக்குதலால், குறைந்த விளைச்சல் மற்றும் அதிக சந்தை விலைகள் காரணமாக, வரத்து குறைவடைந்துள்ளது. சந்தையில் புதிய தக்காளியின் வரவு அதிகமாகும் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் தற்போது தக்காளியின் விலை கணிசமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ராக்கெட்டுல தக்காளி விலை பறந்தாலும், இந்த பொருட்கள் இருக்கும்போது கவலை ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ