புதுடெல்லி: டெல்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய நுகர்வு சந்தைகளில் மொத்த வெங்காயத்தின் விலை (Onion Prices) கிலோ ஒன்றுக்கு ரூ .10 வரை சரிந்தது. புதிய வெங்காயங்கள் சந்தைக்கு வரத் துவங்கியுள்ளதே இதற்குக் காரணமாகும். அதிகரிக்கும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த, வியாபாரிகளிடம் இருக்கும் இருப்பிற்கு அரசாங்கம் வரம்பை உருவாக்கிய பிறகு விலை சற்று குறைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை குறைந்து வருவதைக் காண முடிந்தது. உதாரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான மகாராஷ்டிராவில் உள்ள லாசல்கானில், இருப்பு வரம்புகள் குறித்த அரசாங்கத்தின் உத்தரவுக்குப் பிறகு ஒரே நாளில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ .5 குறைந்தது.  


நுகர்வு சந்தைகளில், அக்டோபர் 23 அன்று ஒரு கிலோ ரூ .76 ஆக இருந்த மொத்த வெங்காயத்தின் விலை அக்டோபர் 24 அன்று ஒரு கிலோ ரூ .66 ஆக குறைந்தது என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேபோல், மும்பை, பெங்களூரு மற்றும் போபாலில் உள்ள விகிதங்களும் ஒரு கிலோவுக்கு ரூ .5-6 குறைந்து முறையே ஒரு கிலோ ரூ .70, ரூ .64, ரூ. 40 என குறைந்துள்ளன.


சந்தைகளில் வெங்காயத்தின் தினசரி வருகையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து விலைகள் சரிந்தன.


தரவுகளின்படி, உலகின் மிகப்பெரிய காய்கறி சந்தையான டெல்லியின் ஆசாத்பூர் மண்டிக்கு தினசரி வெங்காயத்தின் வருகை 530 டன்னாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மும்பையில் இது 885 டன்னிலிருந்து 1,560 டன்னாக அதிகரித்துள்ளது.


சென்னையில், தினசரி வெங்காய வரவின் அளவு 1,120 டன்னிலிருந்து 1,400 டன்னாக உயர்ந்தது. இதேபோல் பெங்களூருவில், சந்தைகளில் தினசரி வெங்காய வரவின் அளவு 2,500 டன்னிலிருந்து 3,000 டன்னாக உயர்ந்தது.


ALSO READ: தொடர்ந்து உயரும் வெங்காய விலைகள்: தீபாவளியில் புதிய உச்சத்தைத் தொடக்கூடும்


இருப்பினும், லக்னோ, போபால், அகமதாபாத், அமிர்தசரஸ், கொல்கத்தா மற்றும் புனே போன்ற நகரங்களில் வருகை இன்னும் அதிகரிக்கவில்லை.


அக்டோபர் 23 ம் தேதி, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. சில்லறை விற்பனையாளர்களுக்கு 2 டன் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு 25 டன் என இருப்பு வரம்புகளை டிசம்பர் 31 வரை விதிக்கப்பட்டது.


உள்நாட்டில் வெங்காயம் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், விலை உயர்வை சரிபார்க்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் இறக்குமதி செய்வதும் தடை செய்யப்பட்டு, ஏற்றுமதிக்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.


இது தவிர, விலை உயர்விலிருந்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க, அரசாங்கம் சில்லறை சந்தையில் அதன் இடையக இருப்பிலிருந்து வெங்காயத்தை வெளியிடுகிறது.


வெங்காய சாகுபடியில் முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் அதிக மழை பெய்ததால் வெங்காயத்தின் விலை அதிகரித்தது.


ALSO READ: உயரப்போகிறது வெங்காயத்தின் விலை, தீபாவளிக்குள் ஒரு கிலோ இவ்வளவு ஆகிவிடும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR