பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு, இன்று வெளியானது. வெளியான தீர்ப்பு ராமரின் விருப்பத்தின் பேரிலேயே வந்துள்ளதாக பாஜக MP சுப்பிரமணியன் சுமாவி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பினை வாசித்தது. இன்று வெளியான தீர்ப்பின் படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதேவேளையில் ஷியா வக்ஃப் வாரிய முறையீட்டை தள்ளுபடி செய்வதாகவும், அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடமளிக்க வேண்டும் எனவும் அமர்வு தெரிவித்தது.


உயர்நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்புக்கு இந்த மத மக்களிடையே வரவேற்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்துத்துவா கட்சிகளும் தங்கள் வரவேற்பை பதவி செய்துள்ளனர்.


இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப பச்சை விளக்கு ராமர் விரும்பியபோதுதான் வழங்கப்படுகிறது. ஜெய் ஸ்ரீ ராம்" என குறிப்பிட்டுள்ளார்.



நாட்டின் முக்கிய நிகழ்வு, நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வரும் சுவாமி அவர்கள், தற்போது ராம்ஜன்ம்பூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கினை தன் கையில் எடுத்துள்ளார்.


முன்னதாக நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பேசிய அவர், பொருளாதார மந்த நிலையை மாற்ற, மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படவேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள், தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. 


முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் சரி, தற்போது பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் பொருளாதாரம் தெரியாது. இவர்களால் சரிந்து உள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த நான்கு, ஐந்து மாதங்களில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும்." என பகிரங்கமாக ஆளும் அரசாங்கத்தையும் குற்றம்சாட்டினார். சுவாமி அவர்களின் அதிரடி கருத்துகளின் வரிசையில் தற்போது அயோத்தி வழக்கு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.