கண்ணூரில் அமைக்கப்பட்டுள்ள கேரளத்தின் நான்காவது பன்னாட்டு விமான நிலையத்தை திறந்துவைத்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளத்தில் ஏற்கெனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கண்ணூரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அபுதாபிக்கு புறப்பட்ட முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தையும் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.


முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி பெயர் அழைப்பிதழில் இல்லாததைக் கண்டித்துக் காங்கிரஸ் கட்சியினர் விழாவைப் புறக்கணித்தனர். சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து பாஜகவினரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.