I.N.D.I.A. Alliance Meeting in Mumbai: மும்பையில் இன்று எதிர்கட்சிகளின் I.N.D.I.A  கூட்டணிக் கூட்டம் தொடங்குகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் பார்வையிலும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவற்றில் தொகுதி பங்கீடு முதல் கூட்டணியின் சின்னம், கொடி, ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரை பல விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு உடன்பாடு ஏற்படுமா என்பது மிக முக்கியமான கேள்வி. கூட்டணி முகமில்லாமல் களத்தில் இறங்கினால் மக்களிடையே வரவேறுபும் தொகுதி பங்கீடும் எப்படி இருக்கும்  எனவும் கேள்விகள் எழுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் இணையும் 28 கட்சிகள் 


இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 2024 லோக்சபா தேர்தலில் I.N.D.I.A மேற்கொள்ள இருக்கும் கூட்டு பிரசார உத்தி, கூட்டணியின் குறைந்தபட்ச பொது திட்டத்தை வரைவு, நாடு முழுவதும் போராட்டங்களுக்கு கூட்டு திட்டங்களை வகுத்து, சீட் பங்கீட்டிற்கு சில குழுக்களை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. முதலில், I.N.D.I.A கூட்டணியில் விவாதிக்க போகும் விஷயங்களையும், எடுக்கப் போகும் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். 


இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படப் போகும் முடிவுகள் 


1. I.N.D.I.A கூட்டணியின் சின்னம் முடிவு செய்யப்படும்.


2. கூட்டணியின் தலைமையகத்தை டெல்லியில் அமைக்கும் திட்டம் குறித்து விவாதம் நடைபெறும்.


3. I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான முன்மொழிவு குறித்து விவாதம் நடத்தப்படலாம்.


4. ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.


5. பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தின் முன்மொழிவு விவாதிக்கப்படலாம்.


6.  கூட்டணியின் பேச்சாளர்களை நியமிக்கும் உத்தரவு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.


7. எதிர்காலத்தில் மாபெரும் பேரணி நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.


8. I.N.D.I.A கூட்டணி விரிவாக்கம் மற்றும் கூட்டணியில் பல கட்சிகள் இணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.


9. தொகுதிகளின் பிரசார பணிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்த சூத்திரம் பற்றிய விவாதம் நடைபெறும்.


10. பா.ஜ.க.வுக்கு எந்த அடிப்படையில் சவால் விடுக்க முடியும் என்பது குறித்து கூட்டணி விவாதிக்கலாம்.


கூட்டணியின் கூட்டு நடவடிக்கை கட்டமைப்பு


மும்பை கூட்டத்தில் மேலும் சில பிராந்திய கட்சிகளும் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. கூட்டத்தில் I.N.D.I.A கூட்டணிக்காக ஆய்வுப் பிரிவு அமைக்கப்படும். 5 முதல் 10 பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஊடகம் மற்றும் சமூக ஊடக மேலாண்மைக்கான கட்டமைப்பு உருவாக்கப்படும். தேசிய நிகழ்ச்சி நிரலுக்காக ஒரு குழு அமைக்கப்படும். I.N.D.I.A கூட்டணியின் கூட்டு நடவடிக்கைக்கான விளக்கமும் தயாரிக்கப்படும்.


மேலும் படிக்க - 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி சிபிஎஸ்இ பாடதிட்டம்-முதல்வர் ரங்கசாமி


பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதில் யார் முன்னிலையில் உள்ளனர்


கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக கூறி வந்தாலும், உள்கட்சி பூசல் நீடிக்கிறது. புதன்கிழமை அன்று ஆம் ஆத்மி கட்சியால் பிரதமர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதனை அக்கட்சி பின்னர் மறுத்தது. சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ் பிரதமர் பொருள் என வர்ணிக்கப்பட்டது. இதற்கு முன், ஜேடியு உட்பட பல கட்சிகளும் தங்கள் தலைவர்களை பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.


I.N.D.I.A கூட்டணிக்கு முன் உள்ள கேள்விகள்


கூட்டணி ஒருங்கிணைப்பாளராக யாரை  ஆக்குவது குறித்தும் கேள்விகள் உள்ளன. இந்தப் பதவிக்கும் பல போட்டியாளர்கள் உள்ளனர். இந்த விவகாரம் மும்பையிலும் விவாதிக்கப்படும். ஆனால், மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்திய கூட்டணியின் கூட்டத்துக்கு முன்னதாகவே போஸ்டர் போரும் தொடங்கி உள்ளது. எனினும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, ஒற்றுமை மந்திரத்தை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மேலும் படிக்க | Aditya L1: L1 என்றால் என்ன? சூரியனை ஆதித்யா எங்கிருந்து ஆராயும்? பதில்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ