India News In Tamil: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு "இண்டியா" என பெயர் வைக்கப்பட்டதால், டெல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சிரமங்கள் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்தப் பெயரால் எதிர்க்கட்சிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்களா? அல்லது இந்த விவகாரம் நீதிமன்றம் செல்லுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? "இண்டியா" என பெயர் வைக்கலாமா? ஒருவேளை "இண்டியா" என பெயர் வைத்தது குற்றம் என்றால் என்ன தண்டனை கிடைக்கும்? "இண்டியா" என்ற பெயருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் என்ன கூறப்பட்டுள்ளது என அனைத்தையும் அறிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

26 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடந்து முடிந்த நடந்தது. அந்த கூட்டத்தில் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டலாம் என கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதது. அதற்கு பல கட்சிகள் சில பெயர்களை பரிந்துரை செய்திருந்தன. இறுதியாக பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance - I.N.D.I.A) என பெயர் வைக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பேச்சுபொருளாக மாறியது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இண்டியா" (I.N.D.I.A) என பெயர் சூட்டப்பட்டதற்கு எதிராக ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. அதாவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இண்டியா" என வைக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரில் அத்தகைய பெயரை வைத்திருப்பது சட்ட மீறல் என்று புகார்தாரர் கூறியுள்ளார். டெல்லி பாரகம்பா ரோடு காவல் நிலையத்தில் அவ்னீஷ் மிஸ்ரா என்ற நபர், இந்த புகாரை அளித்துள்ளார். இந்த புகாரில், 26 கட்சியினரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். 


மேலும் படிக்க - 2024 லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர்! பாஜக மாஸ்டர் பிளான்!


"இண்டியா" என்ற பெயருக்கு எதிராக புகாரில் கூறப்பட்டுள்ளதாவது?
புதன்கிழமை அன்று, அவ்னீஷ் மிஸ்ரா தனது புகாரில், தேர்தல் மற்றும் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்துவதற்காக, "இண்டியா" (I.N.D.I.A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது தவறு என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு "இண்டியா"  என பெயரை பயன்படுத்தியிருப்பது  மூலம் சின்னங்கள் சட்டத்தின் பிரிவு 3 மீறப்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் மிஸ்ரா தனது புகாரில் முறையிட்டு உள்ளார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யவில்லை.


எதிர்க்கட்சிகள் கூட்டணி சட்டச் சிக்கலில் சிக்க முடியுமா?
தேசத்தின் பெயர்கள் மற்றும் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்திற்காக 1950 முதல் ஒரு சட்டம் உள்ளது. நாட்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் இருக்கிறது.


இந்தச் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ், எந்தவொரு நபரும் தனது வணிகம், தொழில், காப்புரிமை, வர்த்தக முத்திரை அல்லது வடிவமைப்பு தொடர்பாக தேசிய சின்னம், பெயர் அல்லது கையொப்பத்தை பயன்படுத்தக்கூடாது. ஆனால், சில சமயங்களில் அவற்றை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


அதேநேரத்தில் இந்த சட்டத்தின் பிரிவு 5 இல், அவ்வாறு செய்வதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிவு 3-ன் கீழ் ஏதேனும் நபர் அல்லது ஒரு அமைப்பு சட்டத்தை மீறி இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் ரூ.500 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க - மோடி vs யார்? எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?


அடுத்தது என்ன நடக்கும்?
"இண்டியா" என்ற பெயருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தால், அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்கலாம். அதன் பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வரும். அப்போது அரசியல் கட்சிகள் "இண்டியா" (I.N.D.I.A) வார்த்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறதா இல்லையா? எனத் தெரியவரும்.


பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சிகளின் பட்டியல்:
1) காங்கிரஸ்
2) டி.எம்.சி
3) தி.மு.க
4) ஆம் ஆத்மி
5) ஜே.டி.யு
6) ஆர்ஜே டி
7) ஜே.எம்.எம்
8) என்சிபி
9) சிவசேனா - உத்தவ் தாக்கரே
10) எஸ்.பி
11) ராஷ்ட்ரிய லோக்தல்
12) அபான தளம் (காமராவாடி)
13) ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
14) பிடிபி
15) சிபிஐ(எம்)
16) சிபிஐ 
17) சிபிஐ (எம்எல்)
18) புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி
19) அகில இந்திய பார்வர்டு பிளாக்
20) ம.தி.மு.க
21) விடுதலை சிறுத்தைகள் கட்சி
22) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
23) எம்எம்கே (மனிதனே மக்கள் கட்சி)
24) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
25) கேரள காங்கிரஸ் - மணி
26) கேரள காங்கிரஸ் - ஜோசப்


மேலும் படிக்க - பாஜவுக்கு எதிராக திட்டம் தீட்டிய சோனியா, ராகுல் சென்ற விமானம் எமர்ஜென்சி லாண்டிங்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ