Opposition Parties Second Meeting: கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று, பீகார் தலைநகர் பாட்னாவில் 16 எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்து இந்த கூட்டத்தை நடத்தினாலும், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அதில் தலைமை தாங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் எதிர்க்கட்சி கூட்டத்தில், இதை ஒருங்கிணைத்த கட்சிகளை தவிர காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, சிபிஐ, சிபிஎம் உள்பட மொத்தம் 16 கட்சிகள் அதில் பங்கேற்றன. 


நான்கு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) இடையே கடுமையான கருத்துப் பரிமாற்றங்களுடன் முடிவடைந்ததாக தெரிகிறது. டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டம் குறித்து காங்கிரஸ் பகிரங்கமாக கண்டிக்கும் வரை, எதிர்காலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க | கெஜ்ரிவால் போட்ட திடீர் குண்டு... பீகார் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் நடந்தது என்ன?


மேலும், அந்த பாட்னா கூட்டத்தில் "பிரதமர் பதவி" பற்றி எந்த விவாதமும் இல்லை என்று பவார் சமீபத்தில் கூறினார். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் வகுப்புவாத வன்முறையை ஊக்குவிக்கும் முயற்சிகள் போன்ற பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தியதாகவும் அவர் பேசியிருந்தார். 


கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இக்கூட்டம் வரலாற்றில் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடத்திய பாட்னா எதிர்க்கட்சி கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், கட்சிகள் பொது நிகழ்ச்சி நிரலிலும் மாநில வாரியான வியூகத்திலும் தேர்தலை எதிர்கொள்வதாக தெரிவித்தன. எதிர்கட்சிகளின் இரண்டாம் கூட்டம் ஜூலை 12, 14ஆம் தேதிகளில் சிம்லாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


தொடர்மழை காரணமாக சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்  நடைபெறவிருந்த நிலையில் பெங்களூருக்கு மாற்றப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். பெங்களூருவில் ஜூலை 13ஆம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இக்கூட்டத்தில், ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கான எதிர்கட்சிகளின் வியூகத்தை இதில் தீர்மானிப்பார்கள் எனவும், பிரதமர் வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு இதில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில், காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தற்போது எதிர்கட்சிகளின் கூட்டம் அங்கு நடைபெறுவது பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.


மேலும் படிக்க | பீகார் எதிர்கட்சியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ