Auto Driver Viral Video: பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது சொற்ப வருமானத்தால் மனமுடைந்து போவதை பதிவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஒரு நிமிட வீடியோ, முதலில் ட்விட்டரில் ஜேவியர் என்ற பயனரால் பகிரப்பட்டது. அவர் கர்நாடக அரசு, இலவச பேருந்து பயணங்களை வழங்குவதால் ஆட்டோ ஓட்டுநரின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர் உள்ளூர் செய்தியாளரிடம் கன்னடத்தில் பேசுகிறார். ஆரம்பத்தில், தனது வேலை குறித்து பேசிய வந்தபோது, ஒரு கட்டத்தில் உணர்ச்சி பெருக்கில் அந்த ஆட்டோ டிரைவர் கண்ணீர்விட்டு தன் நிலையை விவரிக்கிறார். அதாவது, நீண்ட நேரம் வேலை செய்தாலும் வெறும் ரூ. 40 தான் சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து சேவைகளை வழங்குவதே தனது குறைந்த வருமானத்திற்கு காரணம் என்று அவர் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வைரலாகி வரும் வீடியோ
ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் அந்த வீடியோ பார்வையாளர்களை மனமுடைய செய்துள்ளது. இதன்மூலம், அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறகது. இது அவரைப் போன்ற தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல்வேறு காரணிகளால் மோசமாக பாதிக்கப்படுவதாக வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிடுகிறார்கள்.
A Bengaluru auto driver in tears after collecting just Rs 40/- from 8 am to 1 pm. This is the result of free bus rides given by the new Cong govt in Karnataka.
Pushing people into poverty. pic.twitter.com/2RZEjA9pw8— Zavier (@ZavierIndia) June 25, 2023
மேலும் படிக்க | ஒரு பல்புக்கு ஒரு லட்சம் கரெண்ட் பில்லா? தொடரும் குளறுபடியால் மக்கள் விரக்தி!
அந்த வீடியோ வெளியிட்டதில் இருந்து குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது. தற்போது 130.5k பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் பல கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ பதிவு சமூக ஊடக பயனர்களிடையே விவாதத்தையும் தூண்டியுள்ளது. குறிப்பாக, வெவ்வேறு ரீதியிலான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
விவாதத்தை கிளப்பும் வீடியோ
பல பார்வையாளர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் அனுதாபத்தையும் கருணையையும் வெளிப்படுத்தினர், அவர் நீண்ட நேரம் வேலை செய்த போதிலும் சொற்ப வருமானத்தை ஈட்டுவதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களை ஒப்புக்கொண்டனர். சில பயனர்கள் அந்த வீடியோவை மிகவும் வருத்தமளிப்பதாக கூறினர். அது ஓட்டுநருக்கு ஏற்படும் உணர்ச்சிப் பாதிப்பை உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாக அமைகிறது. "இது மிகவும் சோகமானது"; "இது மிகவும் மனவேதனைக்குரியது" போன்ற கருத்துக்கள் ஆட்டோ ஓட்டுநரின் அவலநிலையில் சில நெட்டிசன்களின் அனுதாபத்தை பிரதிபலிக்கின்றன.
மறுபுறம், பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்களின் நடத்தை குறித்து கவலைகளையும் எழுப்பி, வித்தியாசமான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் பயனர்கள் உள்ளனர். ஓட்டுநர்கள் அடிக்கடி பயணிகளுடன் ஒத்துழைக்க மறுப்பதால், அவர்களிடம் சிரமம் மற்றும் விரக்தி ஏற்படுகிறது என்று அவர்கள் கூறினர். இந்த நபர்கள் டிரைவரின் போராட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும், நகரத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுடன் தங்கள் சொந்த எதிர்மறையான அனுபவங்களைப் பிரதிபலிப்பதற்கும் இடையில் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | பெண்கள் இலவச பேருந்து பயணம்: கண்டக்டராகும் கர்நாடக முதல்வர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ