ஹைதராபாத்: ஹைதராபாத்-ன் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 21 வயதான மாணவர் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), கல்லூரி விடுதிக்குள் தற்கொலை செய்து கொண்டர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் தொடர்பாக விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இறந்த மாணவரின் சடலத்தினை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் கிளர்ந்தெழுந்த மாணவர்களை அகற்றுவதற்காக கூடுதல் பொலிஸ் படைகள் விடுத்திக்குள் வந்தடைந்தனர்.


சம்பவத்திற்கு முதல்நாள், இறந்த மாணவர் (M.Sc முதலாம் ஆண்டு மாணவர்) எமிரண முரளி, தனது விடுதியில் உணவு உண்ண வராத நிலையில் அவரது நண்பர் அவரை தேடியுள்ளனர். அப்போது அவரின் இறந்த உடல் மட்டுமே அவர்களால் கண்டெடுக்கப்பட்டது.


சடலத்தின் அருகில் குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது, அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது; 


"என் படிப்பைத் என்னால் தொடர முடியவில்லை, வரவிருக்கும் பரீட்சைகளில் தோல்வி அடைந்துவிடுவேன் என அச்சமாக உள்ளது. பரீட்சைகளில் நான் தோல்வியடைய விரும்பவில்லை, அதனால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.



முரளி குடும்பத்தினர் தெலுங்கானாவின் சித்தீப்பே மாவட்டத்தில் உள்ள டவுலூபூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போது அவரின் சகோதரர் அம்மாவை கவனித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரனை செய்து வருகின்றனர்.