மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தினை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய ட்வீட் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் இன்று மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப் படுகின்றுது.


இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டவர் உள்பட சுமார் 166 பேர் உயிரிழந்தனர். உலகளவில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் எழுந்தது.


இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தினை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது:



அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தினை ஒழிப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.