கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியான எல்டிஎப் 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் "பினராயி விஜயன்" தேர்வு செய்யப்பட்டார். 


இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது. 


இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்து பினராயி விஜயன் கூறியதாவது:


ஜாதி, மதம், அரசியல் மாறுபாடுகளைக் கடந்து எங்கள் அரசு மக்களின் அரசாக இருக்கும்.


மக்களின் ஒத்துழைப்பு தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.


நீதி, நேர்மை,சகோதரத்துவம், வளம், என வளர்ச்சியை நோக்கி எனது அரசு செயல்படும்.


மாநிலத்தின் நலனுக்காக அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அனைத்துப் பகுதி மக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார்.