டெல்லியின் துக்லகாபாத் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக மாணவர்கள் 100 பேருக்கு திடீர் மயக்கமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி வளாகத்துக்கு அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில் இருந்த ஒரு கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதகைகள் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 குழந்தைகள் மயக்கமடைந்தனர். 


தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன்சுடன் சென்று மாணவர்களை மீட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோதியா தனது ட்விட்டர் பக்கத்தில், "பள்ளியின் அருகே இருந்த கிடங்கு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 85 பேர் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் நான் டாக்டரிடம் பேசினேன் அவர்கள் மாணவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர் என மனிஷ் சிசோதியா கூறியுள்ளார்.