கொரோனா வைரஸ் (Corona Virus) இன்னும் உலகை பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஓர் இடத்தில், பழைய வாழ்க்கை படிப்படியாக, மகிழ்ச்சியாக துவங்கிக்கொண்டிருக்கின்றது. இங்கு, பல தொடக்கப் பள்ளிகளில், இந்த கல்வியாண்டில் முதன்முறையாக வரும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், இந்த இடம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. நம் இந்தியாவில்தான் உள்ளது. லட்சத்தீவு (Lakshadweep) தீவுகளில் உள்ள பல தொடக்கப் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை, புதிய வண்ணப்பூச்சுகளுடன் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைகளை காண முடிந்தது.


நாட்டில் முதல் நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் எட்டு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், ஒருவர் கூட COVID-19 தொற்றால் பாதிக்கப்படாத இந்தியாவின் ஒரே பகுதி லட்சத்தீவு மட்டுமே.


வகுப்புகளை மறுதொடக்கம் செய்வதற்கான முடிவை யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி தினேஷ்வர் சர்மா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுடன் கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் எடுத்தார். முன்னதாக, செப்டம்பர் 21 அன்று, 6-12 வகுப்புகள் இந்தத் தீவுகளில் மீண்டும் தொடங்கப்பட்டன.


இதன் மூலம், இந்த யூனியன் பிரதேசத்தில், மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளனர். ப்ரீ ப்ரைமரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.


அமினி தீவில் உள்ள அரசு ஜூனியர் பேசிக் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், 1-5 வகுப்புகளில் உள்ள 126 மாணவர்களில் பெரும்பாலோர் பள்ளிக்கு வந்ததாகத் தெரிவித்தார். கொரோனாவால் இங்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், இங்கும் அனைத்து வித COVID வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் முன் அவர்களுக்கு உடல் வெப்ப சொதனை செய்யப்படுகின்றது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும். வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்கள் கைகளை கழுவ வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டுமே ஒரு பெஞ்சில் உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள்.


வகுப்புகள் மாறி மாறி பள்ளியில் நடத்தப்படும். அதுவும் பெரும்பாலான பள்ளிகளில் மதியம் வரை மட்டுமே வகுப்புகள் நடக்கும்.


இணைய இணைப்பு சிக்கல்கள் காரணமாக முழுநேர ஆன்லைன் வகுப்புகளுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லாததால், இங்கு பள்ளிகளை மீண்டும் திறந்தது மாணவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலான விஷயமாக உள்ளது என்று பலர் வலியுறுத்தினர்.


பள்ளிகள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதங்களை பெற வேண்டும் என்று லட்சத்தீவின் உதவி கல்வி அலுவலர் ஷோகத் அலி தெரிவித்தார். சமைத்த மதிய உணவுக்கு பதிலாக, அரிசி, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய ஒரு கிட் மாணவர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.


ALSO READ: COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்!!


பெற்றோர்களில் ஒரு பகுதியினருக்கு, தங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணி நேரம் முகக்கவசங்களை அணிய வேண்டுமே என்ற கவலை உள்ளது. சுவாசக் கோளாறு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


64,000 மக்கள்தொகை கொண்ட லட்சத்தீவு, COVID-19 ஐ அண்ட விடாமல் செய்வதில் இதுவரை வெற்றிகரமாக இருந்துள்ளது. ஆரம்பகால தயார்நிலை, தீவுக்கு வருவதற்கு முன்பு குடியிருப்பாளர்களுக்கு கட்டாய சோதனை மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் ஆகியவை இதற்குக் காரணங்களாகும்.


மார்ச் மாத இறுதியில் விதிக்கப்பட்ட தேசிய லாக்டௌனுக்கு முன்பே, இந்த யூனியன் பிரதேச அதிகாரிகள், அதன் வான்வழி மற்றும் துறைமுகங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு மூடிவிட்டனர். COVID -எதிர்மறை சான்றிதழ் இருந்தால் மட்டுமே குடியிருப்பாளர்கள் திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட இந்த பகுதியை சேர்ந்த சிலர் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நுழைவு அனுமதி பெற, குடியிருப்பாளர்கள் கேரளாவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வசதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் COVID சோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்களது பரிசோதனை முடிவுகள் எதிர்மறையை வந்தாலும், அவர்கள் ஏழு நாட்கள் லட்சத்தீவில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.


ALSO READ: கோவிட் -19: 9 மாதங்களில் 82 மில்லியன் சோதனைகளைத் தாண்டியது இந்தியா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR