புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களில் 40% பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 539 எம்பிக்களை ஆய்வு செய்ததில், 233 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 116 குற்றப்பின்னணி கொண்ட MP-களை பாஜக கொண்டுள்ளது. இதேபோல் காங்கிரஸில் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 MP-கள் மீது குற்றப்பின்னணியை கொண்டுள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தில் 13 பேரும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 10 பேரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.


கொலை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான குற்றப்பின்ணனி கொண்ட 29 சதவீதத்தினர் புதிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதாவது, 2009 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிட்டால் தற்போது தீவிர குற்றவழக்குகள் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை 109 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 


பாஜகவில் இருந்து வெற்றி பெற்ற 5 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் சார்பில் வெற்றிபெற்ற 2 பேர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒருவர், ஒரு சுயேட்சை என 11 MP-கள் மீது கொலைவழக்குகள் உள்ளன. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாகூர் மீது தீவிரவாத வழக்கு உள்ளது. வெற்றிபெற்ற 29 பேர் மீது  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய புகார் உள்ளது.