ராஜஸ்தானில் 600 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று; மூன்றாவது அலை தொடங்கி விட்டதா?
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவலை எதிர்த்து இந்தியா தீவிரமாக போராடி வரும் நிலையில், கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது, ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே சமயத்தில் சுமார் 600 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவலை எதிர்த்து இந்தியா தீவிரமாக போராடி வரும் நிலையில், கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது, ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே சமயத்தில் சுமார் 600 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் ராஜஸ்தானின் துங்கர்பூரில், 325 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் தவுசா மாவட்டத்திலும் சுமார் 300 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைத்து குழந்தைகளும், 19 வயதிற்குட்பட்டவர்கள். இதுவரை, ராஜஸ்தானின் இரு மாவட்டங்களிலிருந்தும் 600 க்கும் மேற்பட்ட குழந்தைகள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதல், மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் நிலவுகிறது.
நாட்டின் குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் (NCPCR) கடந்த வியாழக்கிழமை, மூன்றாவது கொரோனா அலை நாட்டைத் தாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், ஒரு நிம்மதி அளிக்கும் செய்தியாக பாரத் பயோடெக் அதன் கோவிட் -19 தடுப்பூசி கோவாக்சின் குழந்தைகளுக்கு செலுத்திமேற்கொள்ளும் பரிசோதனைகள் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. குழந்தைகளுக்கு கோவாக்ஸின் செலுத்த மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டின் முடிவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதல் கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று நிறுவனத்தின் வணிக மேம்பாடு பிரிவின் தலைவர் மற்றும் சர்வதேச வழக்கறிஞர் டாக்டர் ரேச்ஸ் எலா (Dr Raches Ella) கூறினார்.
ALSO READ | COVAXIN: ஜூன் 1ம் தேதி முதல் 2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை
Coronavirus updates: கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 4,454 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,454 புதிய இறப்புகள் பதிவானதை அடுத்து இந்தியாவின் கோவிட் -19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது என்று மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று (மே 24, 2021) தெரிவித்துள்ளது.3,02,544 பேர் குணமாகியுள்ளனர்.
நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 2,67,52,447 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இப்போது 27,20,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR