சிக்கபள்ளாப்பூர்: கர்நாடக மாநிலம் சிலிண்டர் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 900 காஸ் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோலார் அருகே சிந்தாமணி என்ற பகுதியில் இந்த குடோன் உள்ளது. இங்கு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. 


இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கபட்டிருந்த 900 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டத்து.  இங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களும் தீக்கிரையாகின.


இங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. தீ முழுவதும் அணைக்கப்பட்டு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.