மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு அசாதுதின் ஓவைசி தலைமையிலான எ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தற்போது போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டு வருமானம் நிதி ஆதாரம் ஆகிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிப்பதாகவும், மூன்று ஆண்டுகளாக வருமான வரி கணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்பித்து வருவதாகவும் ஓவைசி கட்சி தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகாரம் ரத்துக்கு பிண்ணனியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்று நாங்கள் சந்தேக்கிறோம் எனவும் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம்:- ஆவணங்களை சமர்பிக்குமாறு பலமுறை நோட்டீஸ் விடுக்கப்பட்டும், தணிக்கை தகவல்கள் மற்றும் வருமான வரி விவரங்களை அக்கட்சி சமர்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 191 கட்சிகளில் ஓவைசி கட்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.