இலவச கச்சா எண்ணெயை தேடும் பாஜக; பா.சிதம்பரம் சாடல்!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என தேடுங்கள் என மத்திய அரசுக்கு மூத்த தலைவர் பா.சிதம்பரம் சாடியுள்ளார்!
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என தேடுங்கள் என மத்திய அரசுக்கு மூத்த தலைவர் பா.சிதம்பரம் சாடியுள்ளார்!
கடந்த ஆகஸ்ட் மாத்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் தெரிவித்து வருகிறது.
ஆனால், நேற்று ஹைதராபாத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பெட்ரோல், டீசல் விலையை உயர்வைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தினசரி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை கவனிக்காமல் வரும் பொதுத்தேர்தலுக்காக பிராச்சாரம் மோற்கொள்ளுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவரும் நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டரின் மூலம் மத்தியஅரசை சாடியுள்ளார்.
இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
‘‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவிக்கின்றது. ஆனால், பாஜக தலைவரோ பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். பெட்ரோல் விலையனை குறைக்க, கச்சா எண்ணெய் எங்கு இலவசமாகக் கிடைக்கும் என பாஜக தீவிரமாகத் தேடிவருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரியும் வந்த நாள் முதல் நாட்டில் கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று மத்தியஅரசு கூறுகிறது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையரோ, கறுப்புப்பணம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்கிறது என்கிறார். அப்படியென்றால், கறுப்புப்பணம் எங்கிருந்து வருகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்!