பெங்களூரு: பொது விவகார குறியீடு-2020 (Public Affairs Index-2020), நாட்டின் மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலமாக கேரளாவை மதிப்பிட்டு தேர்ந்தெடுத்துள்ளது. தரவரிசைகளை பெங்களூரில் உள்ள பொது விவகார மையம் (PAC) வெளியிட்டது. PAC தரவரிசை 2020 இல் பெரிய மாநிலங்களின் வரிசையில் உத்தர பிரதேசம் கீழே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா (1.388 PAI Index Point), தமிழ்நாடு (0.912), ஆந்திரா (0.531) மற்றும் கர்நாடகா (0.468) ஆகிய நான்கு தென் மாநிலங்கள் பெரிய மாநிலங்களின் பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன.


பிரிவில் எதிர்மறை புள்ளிகளைப் பெற்ற உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் தரவரிசையில் கீழே உள்ளன. அவற்றிற்கு முறையே -1.461, -1.201 மற்றும் -1.158 புள்ளிகள் கிடைத்துள்ளன.


சிறிய மாநிலங்களின் பிரிவில் கோவா 1.745 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக, மேகாலயா (0.797), இமாச்சல பிரதேசம் (0.725) ஆகியவை உள்ளன.


ALSO READ: தமிழகத்தில் 1-9 வகுப்புகளின் syllabus 40%-க்கும் மேல் குறைக்கப்படலாம்!!


PAC தரவரிசைப்படி, மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தரகண்ட் (-0.277) ஆகியவை மிக மோசமாக செயல்படும் மாநிலங்களாக உள்ளன.


யூனியன் பிரதேசங்களில், 1.05 பி.ஏ.ஐ புள்ளிகளுடன் சண்டிகர் சிறந்த முறையில் ஆளப்படும் யூனியன் பிரதேசமாக உள்ளது. அடுத்த இடங்களில் புதுச்சேரி (0.52), லட்சத்தீவு (0.003), தாதர் மற்றும் நகர் ஹவேலி (-0.69), அந்தமான், ஜம்மு-காஷ்மீர் (-0.50), நிக்கோபார் (-0.30) ஆகியவை உள்ளன.


முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் கே கஸ்துரிரங்கன் தலைமையிலான இந்த இலாப நோக்கற்ற அமைப்பு, வெள்ளிக்கிழமை தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. நிலையான வளர்ச்சி என்ற கருத்தில் ஒரு கூட்டு குறியீட்டின் அடிப்படையில் மாநிலங்களின் நிர்வாக செயல்திறன் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்று பி.டி.ஐ கூறியது.


இந்நிகழ்ச்சியில் பேசிய கஸ்துரிரங்கன், "PAI 2020 உருவாக்கும் சான்றுகள் மற்றும் அது வழங்கும் நுண்ணறிவுகள் இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை பிரதிபலிக்க நம்மை கட்டாயப்படுத்த வேண்டும்." என்று கூறினார்.


PAC-யின் படி, சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்களால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சியின் பின்னணியில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.


ALSO READ: பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்த கடல் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR