காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுக்காக வேட்பாளர்களை நிறுத்தாமல் எதையும் தியாகம் செய்ய வேண்டாம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
கான்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!
உ.பி., மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பெருகி வரும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் புதிய முயற்சியை எடுக்கப்பட்டு உள்ளது.
அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பேசிக்கொண்டிருந்தால், அதை புகைப்படம் எடுத்து அம்மாநில போக்குவரத்துறை வழங்கியுள்ள பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால், புகார் அளித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மகோபா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 2.07 மணியளவில் ஜபால்பூரில் இருந்து நிசாமூதின் செல்லக்கூடிய மாகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டது.
ரயிலின் பின் பகுதியில் இருந்த 8 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 22 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது சட்டசபை தேர்தல். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக அகிலேஷ் யாதவ் தன்னந்தனியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.