டெல்லி: 2022ம் ஆண்டில் பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. நாட்டில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.  பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை 'பத்ம விருதுகள்' என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Budget 2022 நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்


இந்த விருதுகள் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசு தலைவரால் (President) ராஷ்ட்ரபதி பவனில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  இந்நிலையில் 2022ம் ஆண்டில் பத்ம விருதுகளை பெறும் சாதனையாளர்கள் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.  இதன்மூலம் 128 சாதனையாளர்களுக்கு பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ போன்ற 'பத்ம விருதுகள்' வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது. 



இந்த பட்டியலில் கடந்த மாதம் கோரமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத்திற்கு (bibin Rawat) நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விபூஷன் வழங்கப்பட உள்ளது, மரணத்திற்கு பிறகு இவருக்கு இத்தகைய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. 



அடுத்ததாக தடுப்பூசி தயாரிப்பாளர்கள் - சீரம் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த சைரஸ் பூனவல்லா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.  மேலும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் microsft மற்றும் Google  நிறுவனங்களின் தலைவர்கள் சத்யா நாரதன மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோரும் பத்ம பூஷன் விருதுகள் பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  அதனைத்தொடர்ந்து பாடகர் சோனு நிகம் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுகிது.


 



ALSO READ | ‘இலவச’ வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR