‘இலவச’ வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொதுநல‌ மனு தாக்கல் செய்யப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2022, 04:11 PM IST
‘இலவச’ வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல்  ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! title=

மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இலவச‌ திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம். 

தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல‌ மனு தாக்கல் செய்யப்பட்டது.

நடைமுறையில் சாத்தியமற்ற இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதியளிக்கும் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை ரத்து செய்யவோ அல்லது அக்கட்சியின்  பதிவை ரத்து செய்யவோ உத்தரவிடக் கோரிய பொதுநல மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ALSO READ | கொரோனா வழிமுறைகள்; ஷிப்டில் இயங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடர்..!!

பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி என்வி. ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதற்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக, 4 வாரங்களில் பதிலளிக்குமாறு கோரியது.

வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில், இலவசங்களை அள்ளி வீசுவது, அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அல்லது ஆட்சியை கைப்பற்ற வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயல் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மக்கள் பணத்தை வாரி இறைக்கும் இத்தகைய நடவடிக்கைகள் முழுவதுமாக தடை செய்யப்பட வேண்டும் என்பதோடு, தேதல் அணையம் ECI, இதை தடுக்க  தகுந்த  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News