பெண்களைப் போன்று ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களை போன்று மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளின் படி 2 குழந்தைகள் வரை வைத்திருக்கும் பெண் ஊழியர்கள், குழந்தைகளை பராமரிப்பதற்காக வருடத்திற்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம்.


இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின் ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம் என்ற முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படம் எனவும், முதல் 365 நாட்களுக்கு 100% சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80% சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படம் என கூறப்படுகிறது.


இதுதவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள் வழங்கப்படுவது போல் ஆட்களுக்கும் 15 நாட்கள் வரை விடுப்பு அளிக்க வழிவகை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.