பாகிஸ்தானில் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 65 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 50 பேர் படுகாயம்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழக்கிழமை காலை ரஹீம் யார் கான் அருகே லியாகத்பூரில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல் பிண்டி செல்லும் தேஸ்காம் விரைவு ரயில் ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூரில் அருகே வந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிர்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 



இச்சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில், ரயில் வந்த பயணிகள் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் நடைபெற்றபோது, பயணிகள் காலை உணவை சமைத்து கொண்டிருந்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த மேலும் 2 ரயில் பெட்டிகளிலும் தீப்பற்றியதாக தெரியவந்துள்ளது.