உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் பாகிஸ்தான் இணையதளத்தில் வெளியாகியள்ள செய்தியில் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த தாக்குதலின் போது 8 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சந்து பாபு லால் என்ற இந்திய ராணுவ வீரர் பிடிபட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 


இந்த தகவலை நேற்றே இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இது போன்ற கவனக்குறைவாக இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லை தாண்டிவிடுவது என்பது வழக்கத்திற்கு மாறான செயல் இல்லை எனவும் இவ்வாறு எல்லை தாண்டும் ராணுவ வீரர்கள் உரிய நடைமுறைகளுக்கு பிறகு திருப்பி அனுப்படுவார்கள் என்று ராணுவ தலமையகம் தெரிவித்துள்ளது. 


பாகிஸ்தானிடம் பிடிபட்ட வீரர், ராணுவ பணியில் இருந்த போது கவனக்குறைவாக எல்லை தாண்டிய போது அந்நாட்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட வீரர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.