நாட்டின் சில பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் டெல்லியின் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவி கவல்ப்ரீத் கவுர், தனது கையில் ‘நான் இந்திய குடிமகள், அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மைக்காக துணை நிற்பேன்’ என்று எழுதிய அட்டையை கையில் வைத்தபடி புகைப்படம் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் கவல்ப்ரீத்தின் புகைப்படத்தில் இருந்த வார்த்தைகள் மாற்றப்பட்டு, இந்தியாவைப்பற்றி அவதூறாக எழுதிய வாசகங்கள் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக டிவிட்டர் நிறுவனத்தில் புகாரளிக்கப்பட்டு அந்த டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டது.