Who is Panauti? Danish Kaneria: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து, "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல" கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் தேர்தல் முடிவுகளைப் பார்த்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா சமூக ஊடக தளத்தில் (x) கிண்டலாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"பனோத்தி யார்?" டேனிஷ் கனேரியா கேள்வி


டேனிஷ் கனேரியா சமூக ஊடக தளத்தில் (x), "பனோத்தி யார்?" எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டு இருப்பதால், ஒரு வகையில் இது காங்கிரஸைத் தாக்கும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் நடந்த நேரத்தில் தான் 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயிலான 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்றார். 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வியடைந்தது. அப்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்ததே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.



மேலும் படிக்க - Rajasthan Election Results 2023 Live: ராஜஸ்தானில் பட்டையை கிளப்பும் பாஜக!!


பிரதமர் நரேந்திர மோடி 'பனோத்தி' -காங்கிரஸ்


2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, 'இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் நன்றாக விளையாடி வந்தார்கள். அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் பனோத்தி அங்கெ சென்றதால், இந்திய அணி தோற்றது' எனக் கூறியிருந்தார். அப்போதிருந்து, காங்கிரஸ் கட்சியின் அனைத்து பெரிய தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 'பனோத்தி' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினர். 


மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி


இன்று (டிசம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை) நடந்த வாக்கு எண்ணிகையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெறும் என்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தெலுங்கானாவில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ்.,யை விட, காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க - Madhya Pradesh Election Results 2023 Live: 160 தொகுதியில் முன்னிலை வகிக்கும் பாஜக!


2024 மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி


மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது, இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்ட மிசோரமில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.


நவம்பர் 17 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் முறையே நவம்பர் 25 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


மேலும் படிக்க - Chhattisgarh Election Results 2023 Live: சத்தீஸ்கரில் பாஜக மாஸ்.. பரிதாப நிலையில் காங்கிரஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ