கடந்த ஜூலை 3ஆம் தேதி, தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரை உத்தர பிரதேசத்தின் ரபுபுரா காவல்துறை கைதுசெய்தது. சீமா ஹைதர், நொய்டாவில் வசிக்கும் அவரது காதலன் சச்சினுடன் வாழ்வதற்காக இந்தியா வந்ததாக தகவல்கள் தெரிவித்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் நடந்து சில நாள்களுக்கு பின், தற்போது சீமாவின் கணவர் குலாம் ஹைதர், தனது நான்கு குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாகத் திரும்பப் அனுப்ப உறுதிசெய்யுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். குலாம் ஹைதர் முழு வீடியோவிலும் அவரின் ஆழ்ந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் வெளிப்படுத்தினார். ஏனெனில் அவரது மனைவி அவரை விட்டுவிட்டு சச்சினுடன் வாழ்வதற்கு தங்கள் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


சவுதி அரேபியாவில் டைல்ஸ் தொழிலில் பணிபுரியும் குலாம் ஹைதர், தனது குழந்தைகள் குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் ஊடகச் செய்திகளின் வாயிலாக அறிந்துகொண்டுள்ளார். அவர் தனது வீடியோவில், தனது நான்கு மகள்களையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்கு வசதியாக இந்திய அரசிடம், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பணிவுடன் வேண்டுகோள் விடுத்தார். குலாம் ஹைதர் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது தனது குடும்பத்தை காப்பாற்ற அவர் செய்த தியாகங்கள் குறித்தும் வீடியோவில் விவரித்தார். அவர் தனது குழந்தைகள் இத்தகைய இக்கட்டான நிலையில் சிக்கியிருப்பதைக் கண்டு ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார்.


மேலும் படிக்க | Porn நடிகை பண்ற மாதிரி பண்ணு! மனைவியை Torture செய்த கணவன்!


தற்போதைய சட்ட நிலை


இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமா, காதலன் சச்சின் மற்றும் சச்சினின் தந்தை நேத்ரபால் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியதுடன் கணவன் குலாம் ஹைதரின் வேண்டுகோளும் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-பி (குற்றச் சதி) மற்றும் 34 (பொது நோக்கங்கள்) மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவுகள் 3/4/5 ஆகியவற்றின் கீழ் தனிநபர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதன் மூலம் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.


சீமா மற்றும் சச்சின் உறவின் பின்னணி


நான்கு குழந்தைகளின் தாயான சீமாவுக்கு, ஆரம்பத்தில் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சினுடன் 2019ஆம் ஆண்டில் பிரபலமான மொபைல் விளையாட்டான PUBG மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில், பல்வேறு சமூக ஊடக தளங்களில் உரையாடல்கள் மூலம் அவர்களின் காதல் உறவு வலுவடைந்தது. குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்ததால், சச்சினை நேரில் சந்திக்க 2023இல் சீமா முடிவெடுத்தார். 


அவர் சவூதி அரேபியாவில் இருந்து ஷார்ஜா வழியாக நேபாளத்திற்குச் சென்று காத்மாண்டுவில் சச்சினுடன் ஒரு வாரத்திற்கு மேல் நாள்களைச் செலவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, சீமா நேபாளத்திலிருந்து பேருந்து மூலம் இந்தியாவிற்குள் நுழைந்து, மே 13ஆம் தேதி முதல் சச்சினுடன் வசிக்கத் தொடங்கினார். இருப்பினும், அவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஒடிஷா ரயில் விபத்து... 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது CBI!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ