பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 இந்திய துணைப்படை வீரர்கள் பலியாகினர். வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த துயர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு உலகின் பல நாடுகளால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு உள்ள மசூத் அசார் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவந்திப்பூரா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் ஒரு முறை கடுமையானதாகி வருகிறது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது.


இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒரு முக்கிய தீவரவாதியும் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


இந்தநிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் சொயல் முகமது-வை பாகிஸ்தான் அழைத்துள்ளது. புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறித்தும், காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக் குறித்து விவாதிக்க தமது நாட்டு தூதரான சொகைல் முகமது டெல்லியில் இருந்து தங்கள் நாட்டுக்கு அழைத்துள்ளது பாகிஸ்தான். இதனால் அவர் இன்று காலை பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.