குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு- மோடி குற்றச்சாட்டு
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. முன்னதாக முதல்கட்ட பிரசாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் தரமற்ற வகையில் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவரை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. மணிசங்கர் அய்யரும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் பேசிய பிரதமர் மோடி,
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். மணிசங்கர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக மீடியா தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி சர்தார் அர்ஷாத் ராபிக், அகமது படேலை குஜராத் முதல் மந்திரியாக்க வேண்டும் என விரும்புகிறாரா? பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் இருந்து உள்ளனர். இந்த கூட்டத்திற்கு மறுநாள்தான் என்னை விமர்சனம் செய்தார்.
ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவம் குஜராத் தேர்தலில் தலையிடுகிறார், மற்றொருபுறம் பாகிஸ்தான் தலைவர்கள் மணிசங்கர் அய்யருடன் கூட்டம் நடத்துகிறார்கள். இந்த சம்பவங்கள் உங்களுக்கு சந்தேகத்தை எழ செய்யவில்லை?
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு போய் கூலிப்படை அமர்த்தி என்னை கொல்வதற்கு மணிசங்கர் அய்யர் முயன்றார் என பிரதமர் மோடி பரபரப்பான குற்றச்சாட்டி உள்ளார்.