இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு உறுதுணையா பாகிஸ்தான் செயல்படுவது உலகத்துக்கே தெரியும். மேலும் அவ்வப்போது  பாகிஸ்தான் 


இராணுவ படை இந்திய வீரர்கள் மேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் மாபெரும் உளவு வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது.


இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். நான் பாகிஸ்தான் தூதர கத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு தூதரக ரீதியிலான சிறப்பு விலக்கு உரிமை இருக்கிறது என்று கூறினான். அதைத் தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அவர் பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.


பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியா மெகமூத் அக்தருடன் கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகியோர் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 உளவாளிகளையும் போலீசார் ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டுபோய் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 


இதையடுத்து, மெஹமூத் அக்தரை இந்தியாவில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று அறிவித்த மத்திய அரசு 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு கடந்த 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது.


தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் 4 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற பாகிஸ்தான் முடிவு செய்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.