பாகிஸ்தான் அரசு இந்தியாவை நினைத்து எவ்வாறு அஞ்சுகிறது என்பதை அந்நாட்டின் பிரதமர் முதல் வெளியுறவு அமைச்சர் வரை வெளியிடும் அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'  நடத்தலாம் என சர்வதேச சமூகத்திடம் முறையிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி அபுதாபியில் பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். இந்தியாவைப் பார்த்து பயந்த பாகிஸ்தான், பிரதமர் நரேந்திர மோடி 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'  நடத்தக் கூடும் என்று இம்ரான் கான் கூறினார்


சர்வதேச விதிமுறைகளை மீறி, எல்லை கட்டுபாட்டு கோட்டில் இந்தியா (India) தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.


ALSO READ | உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது சீனாவின் அலிபாபா


இது மட்டுமல்லாமல், 'இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், குறிப்பாக பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் கொரோனா வைரஸை தவறாக கையாளுதல் போன்றவை காரணமாக, உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப மோடி அரசு (Modi Government) பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என குற்றம் சாட்டியுள்ளார்.


எல்லையில் ஐ.நா. (UN) அதிகாரிகளின் கார் மீது  துப்பாக்கி சூடி நடத்தி, அதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறியதாக இம்ரான் குற்றம் சாட்டியுள்ளார்,. கார் மீது ஐநா சபை என எழுதப்பட்டு, ஐ.நா. கொடி பறந்து கொண்டிருந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதன் மூலம், இந்தியா சர்வதேச விதிகளை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


2020 ஆம் ஆண்டில், இந்தியா, 3000 முறை சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இதில், 92 பெண்கள் மற்றும் 68 குழந்தைகள் உட்பட 276 பேர் கொல்லப்பட்டனர் என்று இம்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த குற்றசாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள இந்திய ராணுவம், குறிப்பாக ஐ.நா கார் மீது துப்பாக்கிச் சூடு  எதுவும் நடத்தவில்லை என இந்திய ராணுவம் ஏற்கனவே மறுத்துள்ளது.


ALSO READ | நேபாளத்தில் அரசியல் நெருக்கடி.. நாடாளுமன்றத்தை கலக்க பரிந்துரை..!!!
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR