குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, வழங்கப்பட்ட தீர்ப்பில் குல்பூசன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என  உத்தரவிடப்பட்டது. தண்டனையை ஆய்வு மறு பரிசீலனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுக அனுமதிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. 


இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள்,  குல்பூஷன் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷன் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 


இந்நிலையில் உளவு பார்த்த குற்றத்திற்காக குல்பூஷன் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். குல்பூஷனை விடுவிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.