பாகிஸ்தான் பயங்கரவாத்தை ஊக்குவிக் கிறது- பிரதமர் மோடி
சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தானுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்த பிரதமர் மோடி ”பாகிஸ்தானை பயங்கரவாதம் ஊக்குவிக்கிறது,” என்று கூறிஉள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவருடைய உரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கிட் மற்றும் பலுசிஸ்தான் விவகாரம் இடம்பெற்று இருந்தது. இப்பகுதியில் உள்ள பிரச்சனையை எழுப்பிய பிரதமர் மோடிக்கு பிராந்திய மக்கள் நன்றி கூறியதாக பிரதமர் மோடி கூறினார்.
பயங்கரவாதியை புகழ்பாடும் பாகிஸ்தானை விமர்சனம் செய்த பிரதமர் மோடி, இதுபோன்ற நாடு “பயங்கரவாதத்தால் ஊக்குவிக்கப்படுகிறது,” என்றார். பயங்கரவாதி பர்கான் வானியின் புகழ்பாடிய பாகிஸ்தானை குறிப்பிட்டு.
140-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்ட பெஷாவர் தாக்குதலை குறிப்பிட்டு பேசுகையில், மனித நல்லொழுக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஒரு செய்தி இருக்கிறது. பெஷாவரில் பள்ளிக் குழந்தைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது இங்குள்ள ஒவ்வொரு பள்ளியும் கண்ணீர் சிந்தியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வருந்தினர். அதுதான் மனித நல்லொழுக்கத்தின் வெளிப்பாடு. ஆனால், மற்றொருபுறம் என்ன நடக்கிறது எனப் பாருங்கள். தீவிரவாதிகளை தியாகிகள் என சிலர் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.அங்கு அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படும் போதும் பாராட்டு நடக்கிறது. அங்கியிருப்பது எவ்விதமான அரசு, பயங்கரவாதத்தால் ஊக்குவிக்கப்பட்டது? இருநிலைப்பாட்டை உலக நாடுகள் அறியவேண்டும்,” என்று பிரதமர் மோடி பேசினார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதை கண்டித்தும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாகிஸ்தான் ‘கருப்பு தினம்’ கடைப்பிடிக்கப்பட்டது.
நவாஸ் ஷெரீப், பர்கான் வானியை ‘தியாகி’ என்று அறிவித்தார், இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி தாக்குதலை கொடுத்து உள்ளார். தேசத்தில் வன்முறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் இடமில்லை. தீவிரவாதத்தை இத்தேசம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.