நாங்கள் அப்படி கூறவில்லை.. தனது பேச்சில் இருந்து பின்வாங்கிய பாகிஸ்தான்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதி பேச்சுவார்த்தை நடத்த கடிதம் எழுதி உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறவில்லை என பாகிஸ்தான் தெர்வித்துள்ளது.
கடந்த ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் பிரதமர் வேட்பாளரான இம்ரான் கான் பாகிஸ்தானின் புதிய பிரதமாராக ஆகஸ்ட் 17 ஆம் தேதி பதவியேற்றார். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி "வாழ்த்துக்கடிதம்" அனுப்பினார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமாராக பதவியேற்ற இம்ரான் கான் அமைச்சர்கள் பொறுப்பினை ஏற்றுகொண்டனர். பின்னர் பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, இந்திய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். அதாவது இந்திய பிரதமர் பாகிஸ்தானின் புதிய பிரதமரான இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில் "இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருப்பதாக சுட்டிக்காட்டி" பேசி உள்ளார். இது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இதுகுறித்து இந்திய தரப்பில், இந்தியாவின் பிரதமர் இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில் இதுபோன்ற எந்தவித சலுகைகளும் இல்லை என்று மறுக்கப்பட்டது. பாக்கிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருக்கு ஒரு பாராட்டு கடிதத்தை மட்டுமே எழுதினார், மற்றபடி இருநாடுகள் பேச்சுவார்த்தை குறித்து எந்த குறிப்பும் அதில் எழுதவில்லை என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த விவாதத்திற்கு பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கபட்டு உள்ளது. அவர்கள் கூறியதாவது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இந்திய பிரதமர் மோடியின் கடிதத்தில் பேச்சுவார்த்தை குறித்து எழுதியுள்ளதாக கூறவே இல்லை என விள்ளக்மாவிளக்கம் அளித்துள்ளது.