பயங்கரவாதத்தை நிறுத்தவாவிட்டால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
பயங்கரவாத இயக்கங்களை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் நாடு சிதறிவிடும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்!
பயங்கரவாத இயக்கங்களை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் நாடு சிதறிவிடும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்!
குஜராத் மாநிலம், சூரத்தில், பணியின்போது வீரமரணமடைந்த 122 ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்., பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையெனில், பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானியர் யாரும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், இந்திய எல்லைக்குள் செல்லும் பாகிஸ்தானியர்களை திரும்பிவர இந்திய ராணுவத்தினர் அனுமதிக்கமாட்டனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஷ்த்து அளிக்கும் சட்ட பிரிவு 370-னை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 6, 2019 அன்று, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவு மற்றும் 35A பிரிவை அகற்றுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். மற்றொரு நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீரை இரண்டு லெப்டினன்ட் கவர்னர்களுடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைத்தது. ஒரு யூனியன் பிரதேசம் லடாக் என்றும் (சட்டசபை இல்லா யூனியன் பிரதேசம்), மற்றொன்று ஜம்மு-காஷ்மீர் (சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம்) என்றும் மத்திய அரசு அறிவித்தது.
சட்ட பிரிவு 370 நீக்கத்தை பாகிஸ்தான் நாட்டால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், ஐ.நா.விடம் முறையிட்டுப் பார்த்தது. ஆனால், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு ஐ.நா. தயாராக இல்லை.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானில் சீக்கியர்கள், பெளத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள்; பாதுகாப்பாக இருக்கிறார்கள்; பாதுகாப்பாக இருப்பார்கள். மக்களை ஜாதி, மத அடிப்படையில் இந்தியா பிரிக்கவில்லை.
பாகிஸ்தானை பிளவுபடுத்த யாரும் தேவையில்லை; அது தானாகவே சிறு துண்டுகளாக சிதறி விடும். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாடு சிறு துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் ராஜ்நாத் சிங்.
இந்நிகழ்ச்சியில், எல்லையில் வீரமரணமடைந்த 122 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.5 லட்சத்தை, மாருதி வீர் ஜவான் அறக்கட்டளை சார்பில் அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.